பிரபல நடிகையின் மகளை திருமணம் செய்து கொண்ட அதிதிராவ் ஹைத்தியின் முன்னாள் கணவர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


மணிரத்னம் இயக்கிய ’காற்று வெளியிடை’ ’செக்கச்சிவந்த வானம்’ உள்பட ஒரு சில படங்கள் நடித்த நடிகை அதிதிராவ் ஹைத்தியின் முன்னாள் கணவர் தற்போது பிரபல நடிகையின் மகளை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
நடிகை அதிதிராவ் ஹைத்தி மற்றும் சத்ய்ஜித் மிஸ்ரா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் சத்யஜித் மிஸ்ரா தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் பிரபல பாலிவுட் நடிகை நீனா குப்தாவின் ஒரே மகள் மசபா குப்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நீனா குப்தாவின் மகள் மசபா ஆடை வடிவமைப்பாளராகவும் தயாரிப்பாளரும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மசபா பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மது மாண்டேனா என்பவரை திருமணம் செய்து அதன் பின் விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மசபாகுப்தா மற்றும் சத்யஜித் மிஸ்ரா திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.