முதல்வர் ஓபிஎஸ்-க்கு இரண்டு அதிமுக எம்பிக்கள் ஆதரவு

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தமிழக அரசியல் தற்போது முயல்-ஆமை கதை போல சென்று கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் 130 எம்.எல்.ஏக்களும், 37 எம்பிக்களும் சசிகலாவுக்கு ஆதரவு என்றும், முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு வெறும் 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வேகமாக முயல் தூங்கியது போலவும், மெதுவாக சென்ற ஆமை வெற்றி பெற்றது போலவும் ஓபிஎஸ் அவர்களின் கை ஓங்கி வருகிறது.

முதல்கட்டமாக அவைத்தலைவர் மதுசூதனன், பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், ஆகிய முக்கிய தலைவர்கள் ஓபிஎஸ் அவர்களுக்கு தங்களது முழு ஆதரவை கொடுத்துள்ள நிலையில் தற்போது முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களுக்கு கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. அசோக்குமார் மற்றும் நாமக்கல் தொகுதி எம்.பி. சுந்தரம் ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர்.

மேலும் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை விடுவித்தால் மேலும் பலர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவிருப்பது தெரியவரும் என்றும், இறுதியில் ஓபிஎஸ் அவர்களே வெல்வார் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

சட்டப்பேரவை கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். கவர்ன்ரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சற்றுமுன்னர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருடைய பொறுப்புகளை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஏற்றுக்கொண்டது...

எந்த அறிக்கையும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. ஆளுனரின் செய்தித்தொடர்பாளர் தகவல்

நேற்று இரவு மத்திய அரசுக்கு கவர்னர் ஒரு அறிக்கை அனுப்பியதாகவும், அந்த அறிக்கையில் சசிகலாவை ஆட்சி அமைக்க உடனே அழைப்பு விடுக்க முடியாது என்று கூறியதாகவும் செய்திகள் வெளிவந்தன...

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. கவர்னர் வித்யாசாகர் ராவ்

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார்? என்ற முடிவு தற்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் கையில் இருப்பதால் அவரது முடிவை எதிர்பார்த்து தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே காத்திருக்கின்றது.

தயவுசெய்து என் ஓட்டை திருப்பி தாங்கடா. பிரபல நடிகை ஆவேசம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் இரண்டு மாதங்கள் முதல்வர் பதவியில் வீற்றிருந்த ஓபிஎஸ் அவர்களை திடீரென பதவி விலக செய்துவிட்டு சசிகலா அந்த பதவிக்கு வரத்துடிக்கும் மனப்பான்மையை கிட்டத்தட்ட தமிழக மக்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக கண்டித்து வருகின்றனர்...

ஆளுனரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின். திடீர் திருப்பம் ஏற்படுமா?

தமிழக அரசியல் களம் இதுபோன்ற ஒரு பரபரப்பை இதற்கு முன் சந்தித்திருக்குமா? என்பது சந்தேகமே...