துப்பாக்கி முனையில் செய்தி வாசிக்கும் அவலம்… இன்னும் என்னென்ன நடக்குமோ?

  • IndiaGlitz, [Monday,August 30 2021]

ஆப்கானிஸ்தான் மக்கள் தாலிபான்களைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்று துப்பாக்கி முனைகளுக்கு நடுவே செய்தியாளர் ஒருவர் செய்தி வாசிக்கிறார். இந்த வீடியோ காட்சி சோஷியல் மீடியாவில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கான காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில் தாலிபான்கள் புதிய அமைச்சரவையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பியோட நினைக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் நிலையத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இதைவிரும்பாத தாலிபான்கள் காபூல் விமான நிலையம் வரும் பொதுமக்களைத் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஒரேநாளில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தை காபூல் விமான நிலையத்தில் நடத்தி ஒட்டுமொத்த மக்களையும் நிலைகுலைய செய்தனர். இந்த விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட 2,00 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் 24-36 மணி நேரத்தில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்து இருந்தார். அவர் இப்படி எச்சரிக்கை விடுத்த ஒரு சில மணிநேரத்தில் காபூல் விமான நிலையத்தில் பெரிய குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த அதிகாரிகள் வான்வழி தாக்குதலுக்கு வெடிப்பொருட்களை நிரப்புவதற்காக வைக்கப்பட்டு இருந்த வாகனம் வெடித்து சிதறியதாகக் கூறப்பட்டது.

இப்படி ஆப்கானிஸ்தான் முழுவதும் ஆங்காங்கே பதற்றமும், அவநம்பிக்கையும் வெறுப்புகளும் தற்போது கரைபுரளத் துவங்கி இருக்கிறது. அதிலும் இக்கட்டான சூழ்நிலையை புரிந்துகொள்ள முடியாத சிறுவர்களின் நிலைமை மேலும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

More News

இந்திய வீரரின் பதக்கம் திடீர் பறிப்பு: என்ன காரணம்?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத்குமார் வெண்கல பதக்கம் வென்ற நிலையில்

'உந்தன் கண்களில் என்னடியோ? எம்ஜிஆர் ஜெயலலிதாவாகவே மாறிய 'தலைவி' பாடல்!

'உந்தன் கண்களில் என்னடியோ? எம்ஜிஆர் ஜெயலலிதாவாகவே மாறிய 'தலைவி' பாடல்!

15 வயது சிறுமி முதல் 21 பெண்கள்: 61 வயது நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

61 வயது நடிகர் ஒருவர் 15 வயது சிறுமி முதல் 51 வயது பெண் வரை 21 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

உலகத்தில் யாரும் செய்யாததையா அவர் செஞ்சிட்டார்: கே.டி.ராகவன் விவகாரம் குறித்து சீமான்!

பாஜக பொதுச் செயலாளராக இருந்த கேடி ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலானது என்பதும் இந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் மதன் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்

பிரபல நடிகை வீட்டில் போதைப்பொருள்? அதிகாரிகள் சோதனையால் பரபரப்பு!

பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும், பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி கன்னட நடிகைகள் ராகினி திவேதி,