close
Choose your channels

15 வயது சிறுமி முதல் 21 பெண்கள்: 61 வயது நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Monday, August 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

61 வயது நடிகர் ஒருவர் 15 வயது சிறுமி முதல் 51 வயது பெண் வரை 21 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல ஹாலிவுட் நடிகரும் ஆபாசபடம் நடிகருமான ரோன் ஜெர்மி என்பவர் மீது 21 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைபடுத்தியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் 15 வயது முதல் 51 வயது வரை என்றும் புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ளது

ஆனால் நடிகர் ஜெர்மி தான் ஒரு நிரபராதி என்றும் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது என்றும் கூறியுள்ளார். அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடும் போது ’தனது கட்சிக்காரர் பாலியல் வன்கொடுமை செய்பவர் அல்ல என்றும், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பது அநியாயம் என்றும் பல பெண்கள் அவருடன் தாமாகவே விரும்பி சென்றார்கள் என்றும் கூறியுள்ளார்

இந்த வழக்கு தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த வழக்கில் அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.