39 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த விருது: 'தேவர் மகன்' நடிகை பெருமிதம்!

  • IndiaGlitz, [Saturday,May 28 2022]

39 வருடங்களுக்கு பின் தனக்கு விருது கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி என ‘தேவர் மகன்’ படத்தில் நடித்த நடிகை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 80 மற்றும் 90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரேவதி. பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ரேவதி, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 1983 ஆம் ஆண்டு 'கட்டத்தே கிளிக்கூடு’ என்ற மலையாளத் திரைப்படத்தில் ஆஷா என்ற கேரக்டரில் அறிமுகமான ரேவதி, 39 வருடங்கள் கழித்து அதே மலையாள திரையுலகில் ’ பூதகாலம்’ என்ற படத்தில் ஆஷா என்ற கேரக்டரில் நடித்தார். இந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததிற்காக கேரள அரசின் விருதினை ரேவதி பெற்றுள்ளார்.

நடிகை ரேவதி ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த 'தேவர்மகன்’ என்ற திரைப்படத்திற்காக சிறந்த சப்போர்ட்டிங் நடிகை என்ற தேசிவிருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரூ.100 கோடி பட்ஜெட், ஒரு வாரத்தில் வெறும் ரூ.3 கோடி வசூல்: அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!

'ஆர்.ஆர்.ஆர்', 'கே ஜி எஃப் 2' போன்ற தென்னிந்திய திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பாலிவுட் திரைப்படம்

நாளை ஐபிஎல் இறுதி போட்டி: ஏ.ஆர்.ரஹ்மான் தந்த ஆச்சரிய அறிவிப்பு

நாளை ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் மைதானத்தில் தனது நிகழ்ச்சி நடைபெறும் என்று ஒரு ஆச்சரிய அறிவிப்பை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்

ஃபேஸ்புக் மூலம் காதல்: திருமண தினத்தில் மணமகளை அரை நிர்வாணப்படுத்திய மணமகனால் பரபரப்பு

பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த ஒருவர், மணமேடையில் மணமகளை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'கே.ஜி.எப் 2' பாடலுக்கு செம கிளாமர் போஸ் கொடுத்த ஷிவானி: வைரல் வீடியோ

சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்று 1300 கோடி வசூல் செய்த 'கே.ஜி.எப் 2' படத்தின் பாடல் ஒன்றுக்கு பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் செம கிளாமர் போஸ் கொடுத்த

மனைவி, குழந்தையுடன் விஜே விஜய்: க்யூட் புகைப்படங்கள்

வானொலியில் விஜேவாக அறிமுகமாகி அதன் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் விஜே விஜய் என்பதும் திரைப்பட இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கி வருகிறார்