அஜித்-விஜய்யை அடுத்து ரஜினி-ஷங்கர் மோதலா?

வரும் பொங்கல் தினத்தில் அஜீத்-விஜய் படங்கள் மோத உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் ரஜினி மற்றும் ஷங்கர் படங்கள் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இரு படங்களில் குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அஜீத், விஜய் படங்களை அடுத்து ரஜினி மற்றும் ஷங்கரின் படங்கள் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் மோத இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ராம் சரண் தேஜா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஆர்சி 15’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருப்பதால் இந்த படமும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியே இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்று வரும் நிலையில் அஜித், விஜய் படங்கள் மற்றும் ரஜினி, ஷங்கர் படங்கள் ஒரே நாளில் மோதுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More News

அசீமுக்கு ரெட்கார்ட்? கமல் முன் கொந்தளித்த ஒட்டுமொத்த போட்டியாளர்கள்!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அசீமுக்கு ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கமல் முன் ரெட் கார்டு கொடுக்கும் நிகழ்வின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து வெளியேறிவிட்டாரா? என்ன நடந்தது?

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பான போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து திடீரென வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என கூறிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் வெளியேறிவிட்டதாக

விக்ரம்-பா ரஞ்சித் படம் குறித்த மாஸ் தகவலை கூறிய ஜிவி பிரகாஷ்!

விக்ரம் நடித்த 'கோப்ரா' மற்றும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

'துணிவு' படத்தை முந்துகிறதா 'வாரிசு': புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

வரும் பொங்கல் விருந்தாக விஜய் நடிக்கும் 'வாரிசு' மற்றும் அஜித் நடிக்கும் 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூர்யாவை பார்த்தவுடன் 'காந்தாரா' நடிகைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: வைரல் புகைப்படம்

சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படம் 'காந்தாரா' மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை சப்தமி கெளடா, நடிகர் சூர்யாவை பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சி அடைந்ததை