close
Choose your channels

'அன்பறிவ்' படத்தை அடுத்து இன்னொரு படத்தையும் அறிவித்த கமல்ஹாசன்.. பிக்பாஸ் மேடையில் ஒரு ஆச்சரியம்..!

Monday, January 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்கள் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியானது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் இந்த படத்தை மீண்டும் உறுதி செய்த கமல்ஹாசன், அன்பு, அறிவு ஆகிய இருவரையும் மேடைக்கு அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். திறமை உள்ளவர்களுக்கு தனது நிறுவனம் வாய்ப்பு வழங்கும் என்றும் அந்த வகையில் அன்பறிவ் அவர்களுடன் மூன்று படத்தில் இணைந்து பணிபுரிந்து உள்ளதால் அவர்களுடைய திறமைக்காக இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த மூன்று படங்கள் ஆக ’விக்ரம்’ ’இந்தியன் 2’ மற்றும் ’இந்தியன் 3’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமலஹாசன் நடிக்கும் ’இந்தியன் 3’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் நேற்றைய பிக் பாஸ் மேடையில் அவர் இந்த படம் குறித்து அறிவித்து உள்ளதை அடுத்து அவரது இன்னொரு படமும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’மற்றும் ’இந்தியன் 3’ ஆகிய இரண்டு படங்களுமே இந்த ஆண்டிற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment