அஜித் ரீல் மகளை அடுத்து ஹிப்ஹாப் தமிழா படத்தில் இணைந்த பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,December 21 2022]

தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் அடுத்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஜோடியாக அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ ’விஸ்வாசம்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் நாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் நடிகை காஷ்மீரா இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ, வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஹிப் ஹாப் தமிழாவின் 7வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு அவரே ஹீரோவாக நடித்து இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஐஸ்வர்யா ராஜேஷின் 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பதும் அவர் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

டாம் குரூஸ் பாணியில் ஆக்சன் காட்சிகள்: வேற லெவலில் 'தளபதி 67'

ஹாலிவுட்டில் உருவாகும் டாம் குரூஸ் படங்களில் ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக 'தளபதி 67' படத்தின் ஆக்சன் காட்சிகள் உருவாக்கப்படும் என்ற தகவல் தற்போது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரோஜா-செல்வமணி திருமணத்தில் அஜித்-ஷாலினி.. அபூர்வ புகைப்படம்

 கடந்த 90 களில் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரோஜா தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் செல்வமணியை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

விக்னேஷ் சிவன் முன் 'லவு யூ' சொன்ன ரசிகரை தேடிய நயன்தாரா..  வைரல் வீடியோ

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கனெக்ட்' என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது.

வீட்டில் மனைவி தூக்கில் தொங்கியது கூட தெரியாமல் போலீஸில் புகாரளித்த காமெடி நடிகர்!

பிரபல காமெடி நடிகர் ஒருவர் தனது மனைவி வீட்டில் தூக்கில் தொங்கியது கூட தெரியாமல் தனது மனைவியை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.