close
Choose your channels

விக்னேஷ் சிவன் முன் 'லவு யூ' சொன்ன ரசிகரை தேடிய நயன்தாரா..  வைரல் வீடியோ

Tuesday, December 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’கனெக்ட்’ என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இந்தக் காட்சியை பார்ப்பதற்காக நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திரையரங்கிற்கு வருகை வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

மேலும் நயன்தாராவை பார்க்க ரசிகர்கள் கூடி இருந்த நிலையில் அவருக்கு பல ரசிகர்கள் ஹாய் சொன்னார்கள். மேலும் ஒரு ரசிகர் திடீரென விக்னேஷ் சிவன் முன் ‘லவ் யூ’ என்று சொன்னதை அடுத்து நயன்தாரா சிரித்துக் கொண்டே தனக்கு லவ் யூ சொன்ன நபரை தேடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ’ஜவான்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்றதும் திருமணத்துக்கு பின்னரும் அவர் திரையுலகில் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.