'அண்ணாத்த' படத்தை அடுத்து 2 இளம் இயக்குனர்களின் படத்தில் ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வந்த ‘அண்ணாத்த’ திரைப்படம் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ரஜினியின் உடல்நலன் ஆகியவை காரணமாக தாமதம் ஆனாலும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிவரை ரஜினி இந்த படத்திற்காக கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ‘அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்டு இரண்டு இளம் இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்த ரஜினிகாந்த், இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ திறப்புவிழா மற்றும் தனுஷின் புதுவீட்டு பூஜை ஆகிய நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சகோதரிகளுடன் சமீபத்தில் திருமணமான தமிழ் நடிகை: வைரல் புகைப்படம்!

சமீபத்தில் திருமணமான தமிழ் நடிகை ஒருவர் தனது சகோதரிகளுடன் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்தப் புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது 

பெண்கள் பாதுகாப்பில் அக்கறை கொண்ட முதல்வர் வேட்பாளர் யார்? கருத்துக் கணிப்பில் அசத்தும் இபிஎஸ்!

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பெண்கள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் வேட்பாளர் யார்

இந்தி ரீமேக்கில் “அருவி“ திரைப்படம்… அதிதி பாலன் வேடத்தில் யார் தெரியுமா?

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி சிறந்த படம் என்று ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படம் “அருவி“.

அதிமுக கூட்டணில் இருந்து விலகியது தமிழ் நடிகரின் கட்சி: தனித்து போட்டி என அறிவிப்பு!

அதிமுக கூட்டணில் இருந்து விலகியது தமிழ் நடிகரின் கட்சி: தனித்து போட்டி என அறிவிப்பு!

கடவுள் படைத்த மிக அழகான பெண்: ஷிவானியின் லேட்டஸ் புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்கள்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பது தெரிந்ததே