close
Choose your channels

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் எலிமினேட் ஆனவுடன் ஷெரின் எங்கே சென்றார் தெரியுமா? வைரல் வீடியோ..!

Monday, May 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேட் ஆன நடிகை ஷெரின் தற்போது கோவா சென்றுள்ள நிலையில் அங்கிருந்து வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்காவது சீசன் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் 10 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கிஷோர் ராஜ்குமார், காளையன், ராஜ் அய்யப்பா, விஜே விஷால் மற்றும் ஷெரின் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது விசித்ரா, ஸ்ருஷ்டி, ஷிவாங்கி, கிரண், கஜேஷ், மைம் கோபி, ஆண்ட்ரியா ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் கிராமத்தில் சமையல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதற்கு முந்தைய வாரம் நடிகை ஷெரின் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் கோவாவுக்கு சுற்றுலா சென்று உள்ளார். அங்குள்ள கடல் பகுதி அருகே சிகப்பு கிளாமர் டிரஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

தனுஷ் நடித்த ’துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷெரின், அதன் பின்னர் ’விசில்’ உள்பட ஒரு சில படங்களில் நாயகியாகவும், சில படங்களில் முக்கிய கேரக்டரிலும் நடித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’நண்பேன்டா’ என்ற திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்த ஷெரின் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment