தீபாவளி படங்களை அடுத்து சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,November 12 2023]

தீபாவளி திருநாளை முன்னிட்டு நேற்று முன் தினம்,, கார்த்தியின் ‘ஜப்பான்’ கார்த்திக் சுப்புராஜின் ’ஜிகர்தண்டா 2’ மற்றும் விக்ரம் பிரபு நடித்த ’’ரெய்டு’ ஆகிய மூன்று படங்கள் வெளியானது என்பதும் இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தீபாவளியை அடுத்து சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவான ’பில்டப்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 24 என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. சரியாக தீபாவளி முடிந்து இரண்டு வாரம் கழித்து வெளியாக இருக்கும் இந்த படம் காமெடி ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 80 களில் ரஜினி, கமல் ரசிகர்களின் மோதல் குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படம் ஜாலியாகவும் கலகலப்பாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சந்தானம் ஜோடியாக ராதிகா ப்ரீத்தி நடித்த இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், சுந்தர்ராஜன், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

அன்பை பரப்புங்கள்: ரஜினி சொன்ன குட்டிக் கதையை பதிவு செய்த பிரதீப்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் தனது சமூக வலைத்தளத்தில் ரஜினி சொன்ன குட்டிக்கதை வீடியோவை பதிவு செய்து அன்பை பரப்புங்கள் என்று கூறியுள்ளார்.

ஸ்ருதிஹாசனை அடுத்து பார்த்திபன் அடுத்த படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பிரபலம்..!

பார்த்திபன் இயக்கத்தில் உருவான 'இரவின் நிழல்' என்ற படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தின் பணிகளை கவனித்து வருகிறார்.

விளையாட்ல மதத்தை கலந்துருக்கிங்க.. குழந்தைங்க மனசுல விஷத்தை வளர்த்துருக்கீங்க: 'லால்சலாம்' டீசர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரதீப்புக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுக்காதது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்..

பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான பிரதீப் மீது மாயா, பூர்ணிமா உட்பட சில பெண் போட்டியாளர்கள் சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.

தீபாவளி வாழ்த்தில் 'வன்மம்' குறித்து பேசிய கமல்ஹாசன்: பிக்பாஸ் முதல் புரமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக பிரதீப் வெளியேற்றம் குறித்து மாயா, பூர்ணிமா குரூப் மற்றும் கமல்ஹாசன் மீது கடும் விமர்சனங்கள்