close
Choose your channels

தீபாவளி படங்களை அடுத்து சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Sunday, November 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தீபாவளி திருநாளை முன்னிட்டு நேற்று முன் தினம்,, கார்த்தியின் ‘ஜப்பான்’ கார்த்திக் சுப்புராஜின் ’ஜிகர்தண்டா 2’ மற்றும் விக்ரம் பிரபு நடித்த ’’ரெய்டு’ ஆகிய மூன்று படங்கள் வெளியானது என்பதும் இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தீபாவளியை அடுத்து சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவான ’பில்டப்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 24 என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. சரியாக தீபாவளி முடிந்து இரண்டு வாரம் கழித்து வெளியாக இருக்கும் இந்த படம் காமெடி ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 80 களில் ரஜினி, கமல் ரசிகர்களின் மோதல் குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படம் ஜாலியாகவும் கலகலப்பாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சந்தானம் ஜோடியாக ராதிகா ப்ரீத்தி நடித்த இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், சுந்தர்ராஜன், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment