close
Choose your channels

துஷாராவை அடுத்து 'தலைவர் 170' படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை..!

Monday, October 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 170’. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று முதல் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று காலை இந்த படத்தில் ’சார்பாட்டா பரம்பரை’ நடிகை துஷாரா விஜயன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் ’இறுதிச்சுற்று’ உட்பட பல திரைப்படங்களில் இந்த படத்தில் ரித்திகா சிங்

நடிகை ரித்திகா சிங், ‘தலைவர் 170’ படத்தில் நடிப்பதை லைக்கா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த படத்தில் அமிதாப்பச்சன் உட்பட பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதற்கு முன்பே இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முழு விவரங்கள் வெளியாகி விடும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment