5 ஆண்டுகளுக்கு பின் சென்னை வந்த ரம்பா: என்ன படம் பார்த்தார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் கடந்த 90களில் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா, கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் .

முழுக்க முழுக்க கனடாவில் செட்டிலாகிவிட்ட ரம்பா, ஐந்து வருடங்களுக்கு பின் தற்போது சென்னை வந்துள்ளார். அவர் சென்னையில் உள்ள திரையரங்கில் அருண்விஜய் நடித்த ’யானை’ படத்தை பார்த்துள்ளார். இந்த படத்தை அவர் அருண்விஜய்யின் சகோதரியும், ஹரியின் மனைவி பிரீதா உடன் பார்த்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் ‘யானை’ படம் பார்த்தவுடன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ஐந்து ஆண்டுகளுக்கு பின் குழந்தைகளுடன் சுற்றுலாவுக்காக இந்தியா வந்தேன் என்றும் அப்போது சென்னையில் 'யானை’ படத்தை பார்க்க குழந்தைகளுடன் பார்த்தேன் என்றும் கூறினார்.

இந்த படத்தின் காமெடி காட்சிகளையும், ஆக்ஷன் காட்சிகளையும் குழந்தைகள் நன்றாக ரசித்து பார்த்தார்கள் என்றும் அருண்விஜய் சூப்பராக நடித்துள்ளார் என்று ஹரி அவர்கள் சிறப்பாக படத்தை இயக்கியுள்ளார் என்றும் ரம்பா பாராட்டுக்களை தெரிவித்தார்.

More News

ராக்கெட்டரி - யானை - டிபிளாக்: இந்த வார ரிலீஸில் வசூலில் முதலிடம் பிடித்த படம் எது: 

உலகநாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் அருண் விஜய்யின் 'யானை' மாதவன் நடித்த 'ராக்கெட்டரி'

தனுஷின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட சத்யஜோதி பிலிம்ஸ்: மாஸ் டைட்டில்!

தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக நேற்று தகவல் வெளியான நிலையில் இன்று அந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 

அறிமுக காட்சியே அதிரடி ஆக்சன் தான்: விஷால் வெளியிட்ட வீடியோ!

நடிகர் விஷால் நடித்து வரும் அடுத்த படத்தின் அறிமுக காட்சியே அதிரடி ஆக்ஷன் காட்சிகள் என விஷால் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் வழியில் சிம்புவுக்கு கிடைத்த கிஃப்ட்!

நடிகர் சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி ராஜேந்தர் அமெரிக்காவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய சிகிச்சைக்கு முழு ஏற்பாடுகளை செய்த சிம்பு தற்போது

'நினைச்சா தோணும் இடமே': விக்கி-நயன் லேட்டஸ்ட் ரொமான்ஸ் புகைப்படங்கள்!

நடிகை நயன்தாராவை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன் 'நினைச்சா தோணும் இடமே' என்ற கேப்ஷனுடன் நயன்தாராவுடன் உள்ள ரொமான்ஸ் படங்களை