15 வயது சிறுமியுடன் 4வது திருமணம். தடுத்து நிறுத்திய 3 முன்னாள் மனைவிகள்

  • IndiaGlitz, [Thursday,May 04 2017]

கடந்த சில காலமாக முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திரமோடியும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்தார். இந்த நிலையில் உபி மாநிலத்தில் ஒருவர் மூன்று மனைவிகளை அடுத்தடுத்து முத்தலாக் முறையில் விவாகரத்து செய்துவிட்டு தற்போது நான்காவதாக 15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உபி மாநிலத்தின் பைரேச் என்ற பகுதியை சேர்ந்த 29 வயது தானிஷ் என்பவர் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து முதல் மனைவியை சில மாதங்களில் விவாகரத்து செய்தார். அதன் பின்னர் 2வது மற்றும் 3வது திருமணம் செய்து அவர்களையும் ஒருசில மாதங்களில் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் நான்காவதாக 15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயற்சித்தார். இந்த தகவல் அறிந்த அவரது மூன்று முன்னாள் மனைவிகள் ஒன்றிணைந்து இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

மூன்று முன்னாள் மனைவிகளும் தானிஷ் தங்களை ஆபாச படம் எடுத்து தவறான வழியில் பயன்படுத்தியதாக பைரேச் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தானிஷை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

More News

ரஜினி படத்தை இயக்குவது எப்போது? ராஜமெளலி பதில்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.750 கோடி வசூல் செய்து ஆச்சரியப்பட வைத்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்த ரூ.1000 கோடி வசூலை இந்த படம் இன்னும் ஒருசில நாட்களில் நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

நீதிபதி கர்ணனுக்கு மனநல பாதிப்பா? மருத்துவர்கள் சோதனை

கடந்த சில வாரங்களாக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியில் இடம்பெற்று வருபவர் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணன். நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதால் சுப்ரீம் கோர்ட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகிய நீதிபதி கர்ணன், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட 7 நீதிபதிகள் கொல்கத்தா ஐகோர்ட்டில் ஏப்ரல&

'பாகுபலி 2' படத்தின் 6 நாள் பிரமாண்ட வசூல் நிலவரம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் செய்ததோடு, வசூலிலும் புதிய சாதனன படைத்து வருகிறது.

லண்டனில் வாள்வீச்சு பயிற்சி பெரும் பிரபல நடிகை

இந்தியாவின் பிரமாண்டமான படமான 'பாகுபலி 2' படத்தின் வெற்றியை அடுத்து தயாரிப்பாளர்கள் துணிச்சலாக பெரிய பட்ஜெட் படத்தை தயாரிக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் சாலையில் பாகிஸ்தான் கொடி. போலீசார் விசாரணை

சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இரண்டு இந்திய ராணுவர்களை கொலை செய்ததோடு அவர்களின் உடல்களையும் சிதைத்த கொடூரமான சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் பாகிஸ்தான் ராணுவத்தினர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்...