close
Choose your channels

'பாகுபலி 2' படத்தின் 6 நாள் பிரமாண்ட வசூல் நிலவரம்

Thursday, May 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் செய்ததோடு, வசூலிலும் புதிய சாதனன படைத்து வருகிறது.
இந்த படத்தின் முதல் நாள் தமிழக வசூலே ரூ.10 கோடிக்கும் அதிகமாக இருந்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் 6 நாட்கள் வசூல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
'பாகுபலி 2' வெளியான ஏப்ரல் 28 முதல் மே 3ஆம் தேதி வரை தமிழகத்தில் மொத்தம் ரூ.54 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் 5.84 கோடியும், செங்கல்பட்டில் ரூ.12.6 கோடியும், கோவையில் ரூ.8.5 கோடியும் வசூல் ஆகியுள்ளது.
இதுவரை வெளியான திரைப்படங்களில் முதல் வார அதிகபட்ச வசூல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது,. இதற்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' ரூ.53 கோடியும், இளையதளபதி விஜய்யின் 'பைரவா' ரூ.52 கோடியும், தல அஜித்தின் 'வேதாளம்' ரூ.50 கோடியும் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.