'இந்தியன் 2' ரிலீஸ் தகவலை அடுத்து 'வேட்டையன்' ரிலீஸ் தகவல்.. லைகா அதிரடி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,April 07 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் நேற்று இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் இன்று அதே நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் தகவலையும் அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேலு இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வேட்டையன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக லைகா நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வர இருக்கும் நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ளது. இந்த இரண்டு பண்டிகளில் எந்த பண்டிகையின் போது ’வேட்டையன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ரானா ரகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரக்சன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

 

More News

மழையில் டான்ஸ்.. அந்தரத்தில் சாகசம்.. தர்ஷா குப்தாவின் கிளுகிளுப்பு வீடியோ..!

நடிகை தர்ஷா குப்தாவின் மழையில் நனையும் கிளுகிளுப்பு நடனம் மற்றும் அந்தரத்தில் நடந்து வரும் சாகசம் ஆகியவற்றின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கதை, திரைக்கதை, வசனம், இசை, தயாரிப்பு, இயக்கம் உட்பட ஒரே படத்தில் 31 பணிகள்.. தமிழ் பெண்ணின் சாதனை..!

கின்னஸ் சாதனையாளர் லாவண்யா என்பவர் ஒரு திரைப்படத்தின் 31 பணிகளை அவரே செய்து சாதனை செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனத்த இதயத்துடன் விலகுகிறேன்.. குஷ்பு அறிவிப்பால் பாஜகவினர் அதிர்ச்சி..!

நடிகை குஷ்பு கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன்

'தளபதி 69' படத்தின் நாயகி இந்த 4 நடிகைகளில் ஒருவரா? லேடி சூப்பர் ஸ்டார் மிஸ் ஆகுதே?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தை எச் வினோத் தான் இயக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த தகவல்கள்

மீண்டும் தென்னிந்திய திரைப்படத்தில் அமிதாப்பச்சன்? பிரபல நடிகருக்கு தாத்தா என தகவல்..!

நடிகர் அமிதாப்பச்சன் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அவர் மீண்டும் ஒரு தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும்