close
Choose your channels

'இந்தியன் 2' ரிலீஸ் தகவலை அடுத்து 'வேட்டையன்' ரிலீஸ் தகவல்.. லைகா அதிரடி அறிவிப்பு..!

Sunday, April 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் நேற்று இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் இன்று அதே நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் தகவலையும் அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேலு இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வேட்டையன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக லைகா நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வர இருக்கும் நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ளது. இந்த இரண்டு பண்டிகளில் எந்த பண்டிகையின் போது ’வேட்டையன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ரானா ரகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரக்சன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.