close
Choose your channels

'ஜெயிலர்' வெற்றியால் 'கேப்டன் மில்லர்' படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

Monday, August 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்த படத்தில் ரஜினியின் நடிப்பு, அனிருத் இசை, நெல்சனின் இயக்கத்தை தாண்டி சிறப்பு தோற்றத்தில் நடித்தவர்களின் மாஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் குறிப்பாக மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் வரும் காட்சிகள் தெறிக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.



கர்நாடக மாநிலத்தில் சிவராஜ் குமார் வரும் காட்சியை அங்குள்ள ரசிகர்கள் கொண்டாடி வருவதாகவும் தமிழ்நாட்டில் கூட அவரது ரசிகர்கள் அந்த காட்சிக்கு கரகோஷத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் வெறும் 10 நிமிடங்கள் தோன்றிய சிவராஜ் குமார் காட்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்றால் தனுஷின் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அப்படி என்றால் அந்த படத்தில் அவருடைய காட்சிகள் மிகப்பெரிய அளவில் மாஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் அவருடைய கேரக்டரை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளதாக கூறப்படுவதால் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment