close
Choose your channels

ஜெயிலரை அடுத்து 'கங்குவா'.. அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இணையும் பிரபலங்கள்..!

Saturday, April 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்க இருக்கும் ‘குட் பேட் அக்லி’ என்ற திரைப்படத்தில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்த சுனில் நடிக்கப் போவதாக சமீபத்தில் செய்தி வெளியான நிலையில் தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வரும் பிரபலமும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி ராக்கர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் சமீபத்தில் சுனில் இணைய இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ‘கங்குவா’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. பாபி தியோல் படத்தில் இணைவது உறுதி செய்யப்பட்டால் இந்த படம் இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment