close
Choose your channels

ஷாருக்கான் படத்தை அடுத்து அட்லியின் படத்தின் மெகா நடிகர்: அப்ப விஜய் படம் என்ன ஆச்சு?

Saturday, October 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜூலை 2ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்தது

ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் உள்பட பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘ஜவான்’ படத்தை முடித்தவுடன் அட்லி, விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’தளபதி 67’ படத்தை அடுத்து ’தளபதி 68’ படத்தை அட்லி தான் இயக்குவார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறின

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி அட்லியின் அடுத்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

சல்மான்கான் படத்தை அட்லீ இயக்குவது உறுதி செய்யப்பட்டாலும் அட்லியின் அடுத்த படம் ‘தளபதி 68’ படமா? அல்லது சல்மான்கான் படமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos