ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் இன்னொரு தென்னிந்திய படம்.. பிரபல ஹீரோவுக்கு ஜோடி..!

  • IndiaGlitz, [Wednesday,March 06 2024]

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஏற்கனவே ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் ’தேவாரா’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு தென்னிந்திய நடிகரின் படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானகி கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’தடக்’ என்ற ஹிந்தி படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு தொடர்ச்சியாக ஒரு சில இந்தி படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் ’தேவாரா’ என்ற படத்தின் நாயகியாக ஜான்வி கபூர் நடித்து வரும் நிலையில் தற்போது ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது குறித்து அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று ஜான்வி கபூர் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ராம்சரண் தேஜாவின் ‘ஆர்சி 16’ படத்தின் நாயகி என தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது

புச்சிபாபு இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'குணா' படத்தை சந்தானபாரதி இயக்கவில்லை.. ஒளிப்பதிவாளர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

மலையாளத் திரைப்படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பின்னர் தான் 'குணா' திரைப்படத்தின் அருமை தற்போது

என் மனைவி இன்று உயிருடன் இருப்பதற்கு காரணம் ரஜினி சார் தான்.. நா தழுதழுக்க சொன்ன பிரபல நடிகர்..!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் தனது மனைவி இன்று உயிரோடு இருப்பதற்கு காரணம் ரஜினி சார் தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நா தழுதழுக்க கூறி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'என்ஜாய் என்சாமி' பாடல் பிரச்சனையில் ஏ.ஆர்.ரஹ்மான்? சந்தோஷ் நாராயணன் விளக்கம்..!

'என்ஜாய் என்சாமி' பாடல் மூலம் தனக்கு ஒரு ரூபாய் கூட வருமானம் வரவில்லை என்று நேற்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில் இந்த வீடியோவின் கமெண்ட்களில் ஏஆர் ரகுமான்

'கோட்' நாயகிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தயாரிப்பாளர்.. எதிர்பாராத அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு..!

தளபதி விஜய் நடித்து 'கோட்' கோட் படத்தின் நாயகி மீனாட்சி சவுத்ரிக்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில்

தலைகீழாக தொங்கி கொண்டு பந்து விளையாடும் ஜோதிகா.. வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ..!

நடிகை ஜோதிகா அவ்வப்போது வொர்க்-அவுட்  செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வொர்க்-அவுட்  வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்