close
Choose your channels

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைகிறதா இந்த பிரபலத்தின் திரைப்படம்?

Sunday, October 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் ஏற்கனவே ரஜினியின் ’லால் சலாம்’ உள்பட 3 திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலத்தின் திரைப்படம் பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லால் சலாம்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய ’அயலான்’ திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை திரைப்படத்தின் நான்காவது பாகம் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படமும் பொங்கல் ரிலீஸ் என கூறப்படுகிறது. இதுகுறித்து அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாக இருக்கும் டீசரில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’தங்கலான்’ பொங்கல் ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டால் நான்கு திரைப்படங்கள் வரும் பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.