close
Choose your channels

லோகேஷின் LCU பாணியில் PCU.. பிரபல நடிகர் படத்தின் மாஸ் தகவல்..!

Thursday, March 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு இயக்குனரின் முந்திய படத்தின் கேரக்டரை அடுத்த படத்தில் புத்திசாலித்தனமாக இணைப்பதை சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று கூறுவது உண்டு. ஹாலிவுட்டில் இது சர்வ சாதாரணமாக நடக்கும் என்றாலும் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’கைதி’ திரைப்படத்தின் டெல்லி கேரக்டரை ’விக்ரம்’ படத்தில் அவர் கொண்டு வந்தார் என்பதும் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகி வரும் ’லியோ’ படத்தில் கூட LCU கேரக்டர்கள் வரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் LCU பாணியில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ’சலார்’ திரைப்படத்தில் அவருடைய முந்தைய படத்தின் கேஜிஎப் கேரக்டரான ராக்கிபாய் இணையவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளன

ஆம் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் யாஷ் நடிக்க உள்ளதாகவும், பிரபாஸ், யாஷ் கலந்து கொள்ளும் கிளைமாக்ஸ் ஸ்டண்ட் காட்சி பிரம்மாண்டமாக ஐரோப்பாவில் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மை என்றால் ‘சலார்’ திரைப்படத்தில் ராக்கிபாய் கேரக்டரில் யாஷை அவரது ரசிகர்கள் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் போலவே பிரசாந்த் நீல் தனது முந்தைய படத்தின் கேரக்டரை கொண்டு வந்துள்ளதால் அவரை பிரசாந்த் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்றும், PCU என்றும் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment