close
Choose your channels

'மகாராஜா' வெற்றிக்கு பின் பாதையை மாற்றிய விஜய் சேதுபதி.. தரமான இயக்குனருடன் கூட்டணி..!

Wednesday, June 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான ’மகாராஜா’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் இதுவரை 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த விஜய் சேதுபதி அடுத்ததாக பெரிய இயக்குனர்கள் அல்லது பெரிய பேனர் படத்தில் நடிப்பார் என்றும் அவருடைய சம்பளமும் அதிகரிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அவர் ’கடைசி விவசாயி’ படத்தின் இயக்குனர் மணிகண்டனுடன் மீண்டும் அவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மணிகண்டன் இயக்கத்தில் உருவான ’கடைசி விவசாயி’ திரைப்படம் தேசிய விருதை பெற்ற நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி, ராமையா என்ற கேரக்டரில் நடித்து அசத்திருந்தார் என்பதும் இந்த படம் பெரிய அளவில் வசூல் இல்லாவிட்டாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பதும் இந்த படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஒரு வெப் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து விட்டு திடீரென வெப் தொடர் என்ற பாதையில் விஜய் சேதுபதி பயணிப்பது கோலிவுட் திரை உலகினர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘விண்ட்’ என்ற டைட்டில் இந்த வெப் தொடருக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹாட்ஸ்டாரில் இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இந்த வெப் தொடர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment