close
Choose your channels

மாயவலை, வாடிவாசலை அடுத்து அமீர், வெற்றிமாறனின் இன்னொரு படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

Sunday, December 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமீர் நடிப்பில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ’மாயவலை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே.

மேலும் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படமான ’வாடிவாசல்’ திரைப்படத்திலும் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் கதையில் அமீர் இயக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’இறைவன் மிகப் பெரியவன்’ என்ற ரைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜாபர் சாதிக் என்பவர் தயாரித்து வருகிறார்

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரு பழனியப்பன், அசார், மைதீன், உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீரின் இயக்கத்தில் உருவாகி வருவதால் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment