மாபா பாண்டியராஜனை அடுத்து ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு அதிமுக விஐபி

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் அணி நாளுக்கு நாள் வலுத்து கொண்டே வந்த நிலையில் தற்போது நிமிடத்திற்கு நிமிடம் வலுத்து வருகிறது. இன்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. அசோக்குமார் மற்றும் நாமக்கல் தொகுதி எம்.பி. சுந்தரம் ஆகியோர் முதல்வருக்கு ஆதரவு அளித்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் தனது ஆதரவை ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து தெரிவிக்கவுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் காவல்துறை அதிகாரியும், மைலாப்பூர் எம்.எல்.ஏவுமான கே.நட்ராஜ் அவர்களும் ஓபிஎஸ் அணிக்கு வரவுள்ளதாகவும், அவர் அனேகமாக இன்று மாலை முதல்வரை சந்தித்து தனது ஆதரவை தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நிமிடத்துக்கு நிமிடம் ஓபிஎஸ் அவர்களின் அணி வலுத்து வருவதும், சசிகலா அணி வலுவிழந்து வருவதுமாக உள்ளதால் தமிழக அரசியலில் தற்போது உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

மேலும் ஒரு அதிமுக அமைச்சர் ஓபிஎஸ் அணிக்கு வருகையா?

நேற்று வரை சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து கொண்டிருந்த அமைச்சர் மாஃபா பாண்டியாராஜன் அவர்கள் தற்போது ஓபிஎஸ் அணிக்கு வர தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது...

முதல்வர் ஓபிஎஸ்-க்கு இரண்டு அதிமுக எம்பிக்கள் ஆதரவு

தமிழக அரசியல் தற்போது முயல்-ஆமை கதை போல சென்று கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் 130 எம்.எல்.ஏக்களும், 37 எம்பிக்களும் சசிகலாவுக்கு ஆதரவு என்றும், முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு வெறும் 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வேகமாக முயல் தூங்கியது போலவும், மெதுவாக சென்ற ஆமை வெற்றி பெற்றது போலவும் ஓபிஎஸ் அவர்களின்

சட்டப்பேரவை கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். கவர்ன்ரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சற்றுமுன்னர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருடைய பொறுப்புகளை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஏற்றுக்கொண்டது...

எந்த அறிக்கையும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. ஆளுனரின் செய்தித்தொடர்பாளர் தகவல்

நேற்று இரவு மத்திய அரசுக்கு கவர்னர் ஒரு அறிக்கை அனுப்பியதாகவும், அந்த அறிக்கையில் சசிகலாவை ஆட்சி அமைக்க உடனே அழைப்பு விடுக்க முடியாது என்று கூறியதாகவும் செய்திகள் வெளிவந்தன...

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. கவர்னர் வித்யாசாகர் ராவ்

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார்? என்ற முடிவு தற்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் கையில் இருப்பதால் அவரது முடிவை எதிர்பார்த்து தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே காத்திருக்கின்றது.