close
Choose your channels

நட்டியுடன் சேர்த்து இந்த பாலிவுட் பிரபலமும் வில்லனா? 'கங்குவா' படத்தின் ஆச்சரிய தகவல்..!

Sunday, July 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நட்டி நடராஜ் வில்லனாக நடித்து வருகிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரும் இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் ‘கங்குவா’ படத்தின் பிளாஷ்பேக் சரித்திர கால காட்சிகளுக்கு நட்டி நடராஜ் வில்லனாக நடித்து வருகிறார் என்றும் அவரது காட்சிகள் தற்போது கொடைக்கானலில் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் மெயின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அவரது காட்சிகளின் படப்பிடிப்பு பாங்காக்கில் அடுத்த மாதம் படமாக்க திட்டமிடப்பட்ட உள்ளதாகவும் அதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள பாபிதியோல், ‘கங்குவா’ படத்தில் இணைந்துள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா 10 கெட்டப்புகளில் இந்த படத்தில் நடித்துள்ளார் என்றும் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment