சீரியல் நடிகை நவ்யா சுவாமியுடன் நடித்த நடிகருக்கும் கொரோனா! பரபரப்பு தகவல்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய பாதிப்பு உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், காவல்துறையினர் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

அந்த வகையில் சமீபத்தில் ’வாணி ராணி’ சீரியல் உள்பட பல தமிழ் தெலுங்கு சீரியலில் நடித்த நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்த செய்தி வெளியானதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் ’தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே தன்னுடன் பணிபுரிந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார்

இந்த நிலையில் நவியா சுவாமி உடன் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்த நடிகர் ரவிகிருஷ்ணா என்பவருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’கடந்த 3 நாட்களுக்கு முன்தான் தான் கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் கடவுள் புண்ணியத்தில் தான் தற்போது குணமாகி வருவதாகவும் தற்போது கொரோனா வைரஸ் குறித்த எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்றும் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாகிவிடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

அதேசமயம் தன்னுடன் பணிபுரிந்த, தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தாங்களே பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் என்பது ஒரு அசிங்கப்பட டிய விஷயம் இல்லை என்றும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை யாரும் ஒதுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

More News

60 வயது பிரபல நடிகருக்கு ஜோடியாகும் அமலாபால்?

ரஜினி கமல் போன்ற 60 வயதுக்கும் மேற்பட்ட மாஸ் நடிகர்களுக்கு இளம் நடிகைகள் ஜோடியாக நடிப்பது வழக்கமான ஒன்றே. அந்த வகையில் மற்றொரு 60 வயதான பிரபல நடிகர் ஒருவருடன் இணைந்து நடிக்க

கோபிநாத்துக்கு அவரது மகள் அளித்த பிறந்த நாள் பரிசு!

விஜய் டிவியில் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று 'நீயா நானா'. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பதும்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து அது புரளி என்றும், மனநிலை சரியில்லாத ஒருவர் செய்த செயல்

சாத்தான்குளம் வழக்கு: தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில்

2036 வரை ரஷ்யாவுக்கு இவர்தான் அதிபர்!!! அதிரடி அறிவிப்பு!!!

பரபரப்புக்கு பஞ்சமில்லை என்று சொல்லும் அளவிற்கு தற்போது உலக நாடுகளில் அரசியல் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.