ரஜினி மகளை அடுத்து பிரபல பாடகர் வீட்டில் நகைகள் திருட்டு.. 60 சவரன்கள் என தகவல்..!

  • IndiaGlitz, [Friday,March 31 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் வீட்டில் சமீபத்தில் நகைகள் திருடு போன விவகாரத்தில் ஈஸ்வரி என்ற பணிப்பெண் மற்றும் சிவக்குமார் என்ற டிரைவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பதும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மகளை அடுத்து பிரபல பாடகர் கே ஜே யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடு போனதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அபிராமபுரம் பகுதியில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வரும் விஜய் யேசுதாஸ் வீட்டில் இருந்த 60 சவரன் தங்க நகைகள் காணவில்லை என்று விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷணா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனது வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து விஜய் யேசுதாஸ் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர், பணியாளர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் ஏற்கனவே பணியில் இருந்து விலகியவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினி மகள் வீட்டில் நகையை திருடியவரை கண்டு பிடித்தது போல் இந்த திருட்டை செய்தவர்களையும் விரைவில் போலீசார் கண்டுபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வில் போல் வளைந்து வேற லெவலில் யோகா செய்யும் ரம்யா பாண்டியன்.. வைரல் வீடியோ..

தமிழ் திரை உலகின் நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் போல் வளைந்து யோகா செய்யும் வீடியோவை

என் பேபிக்கு 60 வயது.. பாடகி ஸ்வேதா மோகன் பகிர்ந்த க்யூட் புகைப்படம்..!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவரான ஸ்வேதா மோகன் தனது தாயார் சுஜாதாவுக்கு இன்று 60 வயது என்று கூறி ஒரு கியூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி

ஒருவேளை நான் இறந்துவிட்டால்..? மனைவிக்கு நடிகர் பாலா கூறிய நெகிழ்ச்சியான விஷயம்..!

இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் இன்று இரண்டாவது திருமண நாளை கொண்டாடி உள்ளார்.

'வாடிவாசல்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு..

 இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் 'விடுதலை'. இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை

நகைச்சுவை நடிகர் சாம்ஸ்-க்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சாம்ஸ் குடும்பத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா?