close
Choose your channels

ரஜினி, தனுஷ், நயன்தாராவை அடுத்து போயஸ் கார்டனுக்கு செல்லும் பிரபல நடிகர்!

Friday, December 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனுஷ், ஜெயம் ரவி உள்பட ஒரு சில நடிகர்கள் போயஸ்கார்டனில் குடியிருக்கும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் பிரபல நடிகர் சந்தானம் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சந்தானம் சமீபத்தில் போயஸ் கார்டனில் ஏலத்திற்கு வந்த வீட்டை கோடிக்கணக்கில் கொடுத்து வாங்கி இருப்பதாகவும் இதனை அடுத்து அந்த வீட்டிற்கு அவர் விரைவில் குடியேற போவதாகவும் கூறப்படுகிறது.

போயஸ் கார்டன் என்றாலே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் ஞாபகம் வருவார் என்ற நிலையில் அதே பகுதியில் ஏற்கனவே ரஜினிகாந்த், நயன்தாரா, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பட்டியலில் தற்போது சந்தானமும் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சந்தானம் நடித்த ’ஏஜெண்ட் கண்ணாயிரம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ‘கிக்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.