ஷிவானியை அடுத்து பிக்பாஸ் பாலாஜியும் மாலத்தீவு சென்றாரா? வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்பதும் அவர் அங்கிருந்து கொண்டே நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்ட ஒரு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷிவானி நீச்சல் குளத்தில் உள்ள புகைப்படத்தை பதிவு செய்த அதே நேரத்தில் பிக்பாஸ் பாலாஜியும் நீச்சல் குளத்தில் உள்ள ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷிவானி உடன் நீங்களும் மாலத்தீவு சென்று இருக்கீங்களா? தனித்தனியாக சென்றீர்களா? அல்லது ஒன்றாக சேர்ந்து சென்றீர்களா? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது குறித்த எந்த கேள்விக்கும் பாலாஜி பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாலாஜியின் நீச்சல் குள புகைப்படத்தின் பின்னணியை பார்க்கும்போது அது மாலத்தீவு போல் தான் உள்ளது என்றும், ஷிவானியின் நீச்சல் குள புகைப்படம் பதிவு செய்த நேரமும், பாலாஜியின் நீச்சல்குள புகைப்படம் பதிவு செய்த நேரமும் ஒரே நேரம் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதே பாலாஜி மற்றும் ஷிவானி ஆகிய இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனது என்பதும் ஆனால் ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சென்ற பின் இருவரும் ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் இருவரும் சேர்ந்து மாலத்தீவு சென்றிருப்பதாக பரவிவரும் வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வதந்திக்கு இருவரில் யாராவது ஒருவர் விளக்கம் அளிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,.
 

More News

மாலத்தீவைவிட அழகாய் இருக்கும் ஷிவானி: லேட்டஸ்ட் வைரல் புகைப்படம்!

சில மாதங்களாகவே மாலத்தீவுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்கள் அங்கிருந்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் புகைப்படங்களால்

மணப்பெண் இவர்தான், விரைவில் திருமண தேதி: விஷ்ணு விஷால் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த 2010ஆம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் இருவரும் கல்லூரி கால நண்பர்கள் என்பதும்

டிக்டாக்,வாட்ஸ்அப் கட்டுப்பாடுகள்,என் வளர்ச்சியை தடுக்கவே...! சீமான் காரசாரப் பேட்டி..!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தன்னுடைய வளர்ச்சியை குறைப்பதற்காகவே,

தனுஷின் 'கர்ணன்' டீசர் குறித்து எச்சரிக்கை விடுத்த இயக்குனர்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கர்ணன்' திரைப்படத்தின் டீசர் நாளை இரவு 7.01 மணிக்கு வெளியாகும் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது என்ற செய்தியை பார்த்தோம்

முன்னணி தொழில் அதிபரின் அசால்ட் சேலஞ்சால்… வைரலாகும் அக்சர் படேல் சன் கிளாஸ்?

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமாக இருந்து வரும் மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹேந்திரா வித்தியாசமான ஒரு சேலஞ்சை நெட்டிசன்களிடம் விடுத்து