close
Choose your channels

ஷிவானியை அடுத்து பிக்பாஸ் பாலாஜியும் மாலத்தீவு சென்றாரா? வைரல் புகைப்படம்!

Monday, March 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்பதும் அவர் அங்கிருந்து கொண்டே நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்ட ஒரு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷிவானி நீச்சல் குளத்தில் உள்ள புகைப்படத்தை பதிவு செய்த அதே நேரத்தில் பிக்பாஸ் பாலாஜியும் நீச்சல் குளத்தில் உள்ள ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷிவானி உடன் நீங்களும் மாலத்தீவு சென்று இருக்கீங்களா? தனித்தனியாக சென்றீர்களா? அல்லது ஒன்றாக சேர்ந்து சென்றீர்களா? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது குறித்த எந்த கேள்விக்கும் பாலாஜி பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாலாஜியின் நீச்சல் குள புகைப்படத்தின் பின்னணியை பார்க்கும்போது அது மாலத்தீவு போல் தான் உள்ளது என்றும், ஷிவானியின் நீச்சல் குள புகைப்படம் பதிவு செய்த நேரமும், பாலாஜியின் நீச்சல்குள புகைப்படம் பதிவு செய்த நேரமும் ஒரே நேரம் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதே பாலாஜி மற்றும் ஷிவானி ஆகிய இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனது என்பதும் ஆனால் ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சென்ற பின் இருவரும் ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் இருவரும் சேர்ந்து மாலத்தீவு சென்றிருப்பதாக பரவிவரும் வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வதந்திக்கு இருவரில் யாராவது ஒருவர் விளக்கம் அளிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.