'விடுதலை 2' படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,September 23 2023]

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய ’விடுதலை’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

’விடுதலை’ முதல் பாகத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருந்த நிலையில் விஜய் சேதுபதி ஒரு சில காட்சிகளில் மட்டும் தோன்றினார். ஆனால் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் ’விடுதலை’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் இன்னொரு கதாநாயகன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்தான் ’அட்டக்கத்தி’ தினேஷ்.

’அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தினேஷ் அதன் பிறகு ’குக்கூ’ ‘திருடன் போலீஸ்’ ’தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ’விசாரணை’ ’ஒரு நாள் கூத்து’ ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ உட்பட சில படங்களில் நாயகனாகவும் ’கபாலி’ உள்பட ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் ’விடுதலை 2’படத்தில் இணைந்துள்ளது உறுதி செய்யப்படும் வகையில் அவர் வெற்றிமாறன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் மஞ்சுவாரியரும் இருக்கும் நிலையில் அவரும் இந்த படத்தில் இணைந்து உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

நடிகை நவ்யா நாயருக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..!

நடிகை நவ்யா நாயர் தனது கணவர், மகன் மற்றும் மாமியாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் நவ்யா நாயருக்கு இவ்வளவு பெரிய மகனா?

மீண்டும் இணையும் கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன்.. விரைவில் அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் ஏற்கனவே பல திரைப்படங்களில் இணைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

இனிமேல் இப்படி நடந்தா கன்னத்திலே அறைவேன்.. கூல் சுரேஷ் குறித்து தொகுப்பாளினி..!

சமீபத்தில் நடந்த திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினிக்கு திடீரென அவர் எதிர்பாராத வகையில் மாலை அணிவித்த நடிகர் கூல் சுரேஷ் செயல் சமூக வலைதளங்களில் பெரும்

இன்று வெளியான படத்தை பாராட்டிய தளபதி விஜய்யின் அம்மா.. என்ன சொன்னாங்க பாருங்க..!

இன்று வெளியான திரைப்படத்தை தளபதி விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பாராட்டி கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

யுவனின் மயக்கும் மெலடி.. 'இறைவன்' படத்தின் ஜெயம் ரவி - நயன்தாராவின் பாடல் வீடியோ..!

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில், அகமது இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'இறைவன்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின்