close
Choose your channels

'விடுதலை 2' படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ.. வைரல் புகைப்படம்..!

Saturday, September 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய ’விடுதலை’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

’விடுதலை’ முதல் பாகத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருந்த நிலையில் விஜய் சேதுபதி ஒரு சில காட்சிகளில் மட்டும் தோன்றினார். ஆனால் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் ’விடுதலை’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் இன்னொரு கதாநாயகன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்தான் ’அட்டக்கத்தி’ தினேஷ்.

’அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தினேஷ் அதன் பிறகு ’குக்கூ’ ‘திருடன் போலீஸ்’ ’தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ’விசாரணை’ ’ஒரு நாள் கூத்து’ ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ உட்பட சில படங்களில் நாயகனாகவும் ’கபாலி’ உள்பட ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் ’விடுதலை 2’படத்தில் இணைந்துள்ளது உறுதி செய்யப்படும் வகையில் அவர் வெற்றிமாறன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் மஞ்சுவாரியரும் இருக்கும் நிலையில் அவரும் இந்த படத்தில் இணைந்து உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment