close
Choose your channels

'டிடி ரிட்டர்ன்ஸ்' வெற்றிக்கு பின் ரிலீஸாகும் 'கிக்'.. சந்தானத்தின் அடுத்த வெற்றிப்படமா?

Saturday, August 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் நடித்த ’டிடி ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் இருந்தது என்பதை படம் பார்த்தவர்கள் மகிழ்ச்சியுடன் உணர்ந்தார்கள் என்பதும் தெரிந்ததே. அதேபோல் இந்த படம் ஜீ5 ஓடிடியில் வரும் செப்டம்பர் 1ஆம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ’டிடி ரிட்டர்ன்ஸ்’ வெற்றிக்கு பின்னர் தற்போது சந்தானம் நடித்த அடுத்த திரைப்படம் ’கிக்’ வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் ஜோடியாக ’தாராள பிரபு’ படத்தில் நடித்த தன்யா ஹோப் நடித்துள்ளார். அர்ஜுன் ஜன்யா இசையில் உருவாகிய இந்த படத்தில் சந்தானம் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

காமெடி, ரொமான்ஸ் கலந்த இந்த படத்தில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் என ஒரு நகைச்சுவை கூட்டமே இருப்பதால் நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos