close
Choose your channels

'கைதி'யை முந்துகிறதா 'ரோலக்ஸ்'? லோகேஷ் கனகராஜின் மாஸ் திட்டம்..!

Friday, August 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ படத்தின் தொழில்நுட்ப பணியில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை திட்டமிட்டபடி அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட வேண்டும் என லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர் இரவு பகலாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் உள்ளனர்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 171’ என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. ’லியோ’ படத்தின் ரிலீஸ்க்கு பின்னர் அவர் ’தலைவர் 171’ படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்குவார் என்றும் அதற்குள் ரஜினிகாந்த், ’ஞானவேல்’ இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வேட்டையன்’ படத்தை முடித்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ‘தலைவர் 171’ படத்தை முடித்தவுடன் அவர் ’கைதி 2’ படத்தை இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி அவர் சூர்யா நடிக்க இருக்கும் ’ரோலக்ஸ்’ படத்தை தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ’விக்ரம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்த ’ரோலக்ஸ்’ கேரக்டரை மையமாக வைத்து ஒரு முழு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டுள்ளார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ரஜினி படத்தை முடித்தவுடன் ’ரோலக்ஸ்’ படத்தை அவர் ஆரம்பிக்க உள்ளதாகவும் அந்த படத்தை முடித்துவிட்டு தான் அவர் 'கைதி 2’ படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ’விக்ரம்’ படத்தின் அடுத்த பாகமும் அவரது திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment