'வாரிசு - துணிவு' படங்களை அடுத்து மீண்டும் விஜய்-அஜித் படங்கள் மோதலா?

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் ஆகிய இரண்டு படங்களும் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதை அடுத்து இரண்டு படங்களின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இரண்டு படங்களையும் வெற்றிப் படமாக்க வேண்டும் என அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரம் முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மூன்றாவது வாரம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தொடங்குவதை பார்க்கும்போது இந்த இரண்டு படங்களுமே அடுத்த ஆண்டு தீபாவளி தினத்தை குறிவைத்து படப்பிடிப்புகள் நடத்தப்படும் என தெரிகிறது. எனவே ’வாரிசு’ மற்றும் ’துணிவு’ படங்களை அடுத்து ’தளபதி 67’ மற்றும் ’ஏகே 62’ படங்கள் வரும் தீபாவளி அன்று மோதுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'மாஸ்டர்' - 'தளபதி 67' படங்களில் உள்ள முக்கிய வித்தியாசம்: லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இணைந்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் வீடியோ

பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நுழையும் வீடியோ சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹாட்ஸ்டாரில் வெளியாகும் புதிய இணையத்தொடர்;  'ஆர் யா பார்' டிரைலர் ரிலீஸ்

உயிர், பணம், அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையிலான போராட்டத்தை கண்முன் நிறுத்தும்  'ஆர் யா பார்' இணையதொடர் டிசம்பர் 30, 2022 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம்

விஜய்சேதுபதி, நயன்தாரா படங்கள் உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ்!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் அந்த படங்கள் ஓடிடியிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். 

துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்: செல்வராகவன் டுவிட்டுக்கு என்ன அர்த்தம்?

துணை என்பது கானல் நீர், நெருங்க நெருங்க தூரம் ஓடும்' என செல்வராகவன் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதை அடுத்து இந்த ட்வீட்டுக்கு என்ன அர்த்தம் என ரசிகர்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.