விஜய்யின் 'வாரிசு' படத்துடன் கனெக்ட் ஆன தனுஷின் 'வாத்தி' : அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,December 23 2022]

தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரம் கடந்த சில நாட்களாக நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் தமிழக ரிலீஸ் உரிமையை நிறுவனம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும், சமீபத்தில் தனுஷ் எழுதிய இந்த படத்தின் பாடல் வெளியாகி வைரலாகியது என்பதும் தெரிந்ததே.

ஏற்கனவே தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’, ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில் ‘வாத்தி’ தனுஷின் ஹாட்ரிக் வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'வணங்கான்' படத்தை அடுத்து 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலகுகிறாரா சூர்யா?

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த 'வணங்கான்' என்ற திரைப்படத்தில் இருந்து சூர்யா திடீரென விலகினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து இந்த படத்தில்  அதர்வா

ரஜினி படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கின்றாரா யுவன்ஷங்கர் ராஜா?

முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

விளக்கேற்றும்போது நடந்த தீ விபத்து: தமிழ் நடிகை வீட்டில் பலத்த பொருட்சேதம்

நடிகை ஒருவர் தனது வீட்டில் விளக்கேற்றும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது வீட்டில் விலைமதிப்புள்ள ஏராளமான பொருட்கள் நாசம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

3 முன்னணி நாயகிகள் நடிக்கும் படம்.. இசையமைப்பாளராகும் டிரம்ஸ் சிவமணி

3 முன்னணி நாயகிகள் நடிக்கும் திரைப்படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

'தளபதி 67' வில்லன் அர்ஜூனுக்கு இத்தனை கோடியா சம்பளம்?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன