close
Choose your channels

3 முன்னணி நாயகிகள் நடிக்கும் படம்.. இசையமைப்பாளராகும் டிரம்ஸ் சிவமணி

Friday, December 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

3 முன்னணி நாயகிகள் நடிக்கும் திரைப்படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் 'Quotation Gang’. இந்த படத்தில் பிரியாமணி, சாரா அர்ஜுன் ஆகியோரும் நடிக்கிறார்கள் என்பதும், இன்னொரு முக்கிய வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசை அமைக்க டிரம்ஸ் சிவமணி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர் அரிமா நம்பி, கணிதன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் இசையமைத்துள்ள நிலையில் தற்போது பான் இந்தியா திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.