close
Choose your channels

'அமரன்' படத்தின் ஹீரோ கேரக்டர்.. விஜய்க்கு அடுத்து மரியாதை செலுத்தும் சிவகார்த்திகேயன்..!

Friday, February 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ’அமரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் வீடியோ டீசர் வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ள நிலையில் அவரது கேரக்டரின் பெயர் முகுந்த் என்பதும் இந்த வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

ஏற்கனவே தளபதி விஜய் ’துப்பாக்கி’ திரைப்படத்தில் ராணுவ வீரராக நடித்த நிலையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் அவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேஜர் முகுந்த் வீரமரணம் அடைந்த நிலையில் அவரது மூன்று வயது மகளுடன் விஜய் விளையாடிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.

தற்போது விஜய்யை அடுத்து வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சிவகார்த்திகேயனும் அதே கேரக்டரில் ’அமரன்’ படத்தில் நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது. மொத்தத்தில் மேஜர் முகுந்த் மறைந்து பல ஆண்டுகள் ஆகிய போதிலும் அவரை மறக்காமல் தமிழ் சினிமா அவ்வப்போது பெருமைப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment