close
Choose your channels

விஜய்யை அடுத்து மாஸ் நடிகருடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா.. க்யூட் வீடியோ வைரல்..!

Monday, August 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகி ஆக நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாஸ் நடிகர் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா என்பதும் இவர் பிரபல நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக கார்த்தி நடித்த ’சுல்தான்’ விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது தனுஷ் நடிக்க இருக்கும் ’D51’ படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த க்யூட் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

முதன் முதலாக தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனுஷின் ’D51’ திரைப்படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்க இருக்கிறார் என்பதும் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.