close
Choose your channels

விஜயலட்சுமிக்கு ஓட்டுவேட்டையாட களமிறங்கிய பிரபல இயக்குனர்

Tuesday, September 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டில் வந்தாலும் தற்போதைய போட்டியாளர்களில் போல்டாக இருப்பவர் விஜயலட்சுமிதான். யாரிடமும் வம்புக்கு போகாமல் அதே நேரத்தில் யாராவது வம்புக்கு வந்தால் அவர்களை வச்சு செய்யும் விஜயலட்சுமி, பிக்பாஸ் போட்டியின் ஃபைனலுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைல்ட் கார்டில் வந்தவர் என்ற குறையை தவிர சக போட்டியாளர்கள் அவரிடம் வேறு எந்த குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை

இந்த நிலையில் பிரபல இயக்குனரும் தமிழ்த்திரையுலகில் முதல்முறையாக தேசிய விருது பெற்ற இயக்குனர் என்ற பெருமையை பெற்றவருமான அகத்தியன், விஜயலட்சுமிக்காக ஓட்டு கேட்டு தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவுசெய்துள்ளார். இவர் விஜயலட்சுமியின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகளுக்காக தனது ஃபேஸ்புக்கில் இயக்குனர் அகத்தியன் கூறியதாவது: ஒரு இயக்குநராக இல்லை அப்பாவாக இந்தப்பதிவு. மகளுக்காக வாக்ககளிக்க தங்களிடம் கேட்பதில் மகிழ்வும் பெருமையும். விருப்பம் தங்களைச் சார்ந்தது.நன்றி என்று கூறியுள்ளார். அகத்தியனின் இந்த வேண்டுகோளை அடுத்து விஜயலட்சுமிக்கு அதிகளவு வாக்குக்கள் பதிவாகி வருகிறது என்பது அவரது பதிவின் கீழ் உள்ள கமெண்ட்களில் இருந்து தெரிய வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.