close
Choose your channels

கல்லூரி மாணவியுடன் ஓட்டம்: தமிழ் திரைப்பட ஹீரோவை வலைவீசி தேடும் போலீசார்

Thursday, January 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பயபுள்ள' என்ற திரைப்படத்தில் ஹீரோவாகவும், பல படங்களில் சிறு வேடங்களில் நடித்த நடிகர் சிவா, அவரது பக்கத்து வீட்டில் வசித்த கல்லூரி மாணவியுடன் ஓடிவிட்டதாகவும் பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் சிவாவை போலீசார் தேடுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகர் சிவா தனது மனைவி குழந்தையுடன் சென்னை ராமாவரம் பகுதியில் வசித்து வந்தார். 'பயபுள்ள' படத்தை தவிர வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் சின்னச்சின்ன கேரக்டரில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் பெரிய ஹீரோக்களுடன் இணைந்து எடுத்து புகைப்படங்களை பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவரிடம் காட்டி அவரை தனது காதல் வலையில் விழச்செய்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரியவர, உடனே நடிகர் சிவாவை கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென நடிகர் சிவா, அந்த கல்லூரி மாணவியுடன் தலைமறைவானார். தங்கள் மகளை காணவில்லை என்று அந்தப் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் அதிரடி விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினரின் சிவாவை வலைவீசி தேடி வருகின்றனர். அவருடைய புகைப்படம் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment