ரஜினி பிறந்த நாளில் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிடும் ஆப்பிள் பாக்ஸ்

  • IndiaGlitz, [Thursday,November 24 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் ஏற்கனவே இரண்டு படங்கள் இயக்கி முடித்துள்ள நிலையில் விரைவில் மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
'Standing on the Apple Box' என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாளில் வெளியாகவுள்ளது. ஒரு சூப்பர் ஸ்டாரின் மகளாக சிறு வயதில் வளர்ந்தது, ஒரு புகழ் பெற்ற நடிகரை திருமணம் செய்து கொண்டது உள்பட பல நினைவுகளை அவர் இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளாராம்.
இந்த புத்தகம் திட்டமிட்டு எழுதப்பட்டது அல்ல என்றும், ஐஸ்வர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக ரெகுலராக டைரி எழுதும் பழக்கம் இருந்ததாகவும், அந்த டைரிகளின் தொகுப்புகளே இந்த புத்தகம் என்றும் கூறப்படுகிறது. இந்த புத்தகத்தின் உரிமையை Harper Collins என்றா நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திருமண மொய் வாங்க ஸ்வைப் மிஷினுடன் அமர்ந்திருந்த மணமக்கள்

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற பிரதமரின் ஒரே ஒரு அறிவிப்பு நாட்டையே தலைகீழாக மாற்றிவிட்டது. இதுவரை ...

கவுதம் மேனன் - விக்ரம் படம் குறித்த புதிய தகவல்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தற்போது இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை அடுத்து விக்ரமுடன் இணையவுள்ளார்...

ரூபாய் நோட்டு விவகாரம் திட்டமிடப்பட்ட திருட்டு; சட்டபூர்வ கொள்ளை. மன்மோகன் சிங் பாய்ச்சல்

ஊழல் பணம், கருப்புப்பணம், கள்ள நோட்டுக்கள் ஆகியவற்றை ஒழிக்க மத்திய அரசு சமீபத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது...

வேந்தர் மூவீஸ் மதனுக்கு எத்தனை மனைவிகள்? காதலிகள் உண்டா? தாயார் விளக்கம்

கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்த வேந்தர் மூவீஸ் மதன் சமீபத்தில் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது....

கே.வி.ஆனந்த்-விஜய்சேதுபதியின் 'கவண்' ரிலீஸ் எப்போது?

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து நடித்துள்ள 'கவண்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது...