ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அதிர்ச்சியை கொடுத்த புளுவேல் கேம்

  • IndiaGlitz, [Thursday,August 24 2017]

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ள புளூவேல் என்னும் ஆன்லைன் விளையாட்டால் இந்தியா உள்பட பலநாடுகளில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்துள்ளனர். சமீபத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இந்த நிலையில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரின் நண்பர் ஒருவர் இந்த விளையாட்டு அடிமையாகி தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனால் அவர் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சமூக வலைத்தளங்களும், ஸ்மார்ட் போன்களும் நம் வாழ்க்கையில் ஒரு சிறு பகுதிதான். நாம் அவற்றை கட்டுக்குள் வைத்து சரியான நோக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத நோக்கத்திற்காக பயன்படுத்தினால் தேவையில்லாத விபரீதங்களில் கொண்டுபோய் சேர்த்து விடும். அது முட்டாள் தனமானது. புளூவேல் விளையாட்டால் ஏற்படும் விபரீதங்கள் குறித்த விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்' எனத் தெரிவித்தார்.

More News

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கமல் பாராட்டு

ஆதார் அட்டை குறித்த வழக்கு ஒன்றின் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த தீர்ப்புக்கு உலகநாயகன் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்...

அப்பா வேடத்தில் நடிக்க வேண்டிய நடிகரா அஜித்? பாலிவுட் நடிகரின் சர்ச்சை டுவீட்

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இன்று வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்...

அஜித்தின் 'விவேகம்': பலம் மற்றும் பலவீனங்கள்

தல அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'விவேகம்' திரைப்படம் அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு திரைப்படம்.

அக்சராஹாசனுடன் 'விவேகம்' படம் பார்த்த கமல்ஹாசன்

அஜித்தின் 'விவேகம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது...

டுவிட்டர் ஹேஷ்டேக்கிற்கு இன்று 10வது பிறந்த நாள்

டுவிட்டரில் எதற்கெடுத்தாலும் # என்னும் ஹேஷ்டேக் செய்வது கடந்த சில வருடங்களாக டிரெண்ட் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த ஹேஷ்டேக்கிற்கு இன்று 10 வயது ஆகிறது