ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு படங்களில் ஒன்றின் ரிலிஸ் தேதி தள்ளிவைப்பு!

  • IndiaGlitz, [Saturday,December 24 2022]

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ மற்றும் 'டிரைவர் ஜமுனா’ ஆகிய 2 திரைப்படங்கள் டிசம்பர் 29, டிசம்பர் 30 ஆகிய அடுத்தடுத்த நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்ற திரைப்படம் இதே பெயரில் வெளியான மலையாளப் படத்தின் ரீமேக் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ மற்றும் ’டிரைவர் ஜமுனா’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கும் என இரு படங்களின் தயாரிப்பாளர்கள் கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 29க்கு பதிலாக விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் ’டிரைவர் ஜமுனா’ என்ற திரைப்படம் டிசம்பர் 30ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சினேகா-பிரசன்னாவின் க்யூட் போட்டோஷூட்!

தமிழ் திரை உலகின் நட்சத்திர க்யூட் ஜோடியான சினேகா-பிரசன்னா பிரிய போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி கிளம்பிய நிலையில் அந்த வதந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சினேகா

ஒரே நேரத்தில் அஜித் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை: குவியும் வாழ்த்துக்கள்

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அஜித் நடித்த 'வேதாளம்' மற்றும் விஜய் நடித்த ''புலி' ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்த நிலையில் தற்போது

கணவர் மறைவுக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் மீனா.. மேக்கப் போடும் வீடியோ வைரல்!

 நடிகை மீனாவின் கணவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காலமான நிலையில் தற்போது அவர் கணவர் மறைவுக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மேக்கப் போடும் வீடியோவை அவர் தனது

'வெண்ணிலா கபடி குழு' படத்தில் நடித்த இன்னொரு நடிகர் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

 'வெண்ணிலா கபடிகுழு' திரைப்படத்தில் நடித்த ஹரி வைரவன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் தற்போது அதே படத்தில் நடித்த இன்னொரு நடிகர்

'வாரிசு',  'துணிவு' பொங்கலுக்கு முதலில் எந்த படம் பார்ப்பீங்க? -வடிவேலு பதில்!

 விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் நாளில் வெளியாக இருப்பதை அடுத்து இந்த இரண்டு படங்களையும் பார்க்க விஜய், அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்