close
Choose your channels

ஒரே நேரத்தில் அஜித் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை: குவியும் வாழ்த்துக்கள்

Saturday, December 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அஜித் நடித்த 'வேதாளம்’ மற்றும் விஜய் நடித்த ’’புலி’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்த நிலையில் தற்போது அஜித் நடிக்கவிருக்கும் ’ஏகே 62’ மற்றும் விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ திரைப்படத்திலும் ஒரே நடிகை நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாகவும் இந்த படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’ஏகே 62’ என்ற படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் அஜித் விஜய் ஆகிய இருவருக்கும் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னரே த்ரிஷாவுக்கு அஜித், விஜய் ஆகிய இருவரின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.