close
Choose your channels

இந்த 9ஐ நிச்சயம் கடைபிடியுங்கள்: விவாகரத்து மனு தாக்கல் செய்த மறுநாள் ஐஸ்வர்யா ரஜினியின் பதிவு..!

Tuesday, April 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சட்டப்படி பிரிவதற்கு நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக தகவல் வெளியான நிலையில் இன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் இந்த ஒன்பது விஷயங்களை கடைபிடியுங்கள் என்று கூறியிருப்பது வைரல் ஆகி வருகிறது.

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்

இந்த நிலையில் திடீரென கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளத்தில் பிரிவதாக அறிவித்தனர். இருப்பினும் அவர்கள் சட்டப்படி விவாகரத்து பெறாத நிலையில் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது

இந்த நிலையில் நேற்று குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் தங்களது திருமணம் செல்லாது என்ற அறிவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் இந்த 9 விஷயங்களை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதில் 9 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும், 8 மணி நேரம் தூங்க வேண்டும், 7 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும், 6 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும், 5 விதமான பழங்கள் காய்கறிகள் சாப்பிட வேண்டும் ,மூளைக்கு 4 முறை பிரேக் கொடுக்க வேண்டும், 3 முறை சாப்பிட வேண்டும், தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன் செல்போன் பயன்படுத்த கூடாது மற்றும் 1 செஷன் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த 9 வகை பழக்கத்தை தினமும் கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.